Thirukural with meaning in tamil -vaansirappu

 திருக்குறளும்-விளக்கமும்

திருவள்ளுவர்


திருக்குறள் மனிதனாக பிறந்த அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். வாழ்க்கையின் தத்துவத்தை இரண்டே அடியில் உலகுக்கு கூறிய நூல். சாதி, மதம், வேற்றுமை என அனைத்திற்கும் அப்பாற்பட்ட நூல்.உலகில் உள்ள மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்.உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.  நம் தமிழர்களின் தொன்மையை அடையாளம்  கூறும் நூல் நம் திருக்குறள். உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைவராலும் படிக்கப்படும் திருக்குறளை  தமிழர்களாகிய நாம் விளக்கத்துடன் இங்கு படித்து பயன்பெறுவோம்.
Thirukural porul

  இயல்-பாயிரவியல்

  பால்-அறத்துப்பால்
                          
  அதிகாரம்- வான்சிறப்பு


குறள் : 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

கலைஞர் உரை :

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறன.

குறள் : 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.

குறள் : 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

கலைஞர் உரை :
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


குறள் : 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்



கலைஞர் உரை :

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.


குறள் : 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

கலைஞர் உரை :

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.


குறள் : 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

கலைஞர் உரை :

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.


குறள் : 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்


கலைஞர் உரை :

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.


குறள் : 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

கலைஞர் உரை :

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.


குறள் : 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

கலைஞர் உரை :

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

குறள் : 20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

கலைஞர் உரை :

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Thirukural free images

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil

Thirukural with meaning in tamil


மேலும் பல அறிஞர்களின் சிந்தனைகளை காண எங்கள் பக்கத்தை தொடரவும்..
Quotes in tamil,love quotes,birthday quotes, celebration quotes,thirukural, kuzhanthai valarpu,sad quotes,feeling quotes,quotes about travel,quotes about time,quotes about nature,quotes about love,quotes about life,quotes about happiness,quotes about friendship,tamil quotes about education,tamil quotes images,tamil quotes about love,tamil quotes about life.


Related searches
thirukural with meaning in tamil
thirukural tamil
thirukural 
thirukural adhikaram 1
thirukkural adhikaram
thirukural
thirukural for kids
thirukural with meaning in tamil
thirukural first 10
thirukural history in tamil
thirukural kalvi adhikaram
thirukural kathaigal
thirukural natpu adhikaram in tamil
thirukural nandri
thirukural meaning
thirukural other names in tamil
thirukural on friendship
thirukural express
thirukural tamil


Post a Comment (0)
Previous Post Next Post