30 Vivekanandar quotes in tamil

 விவேகானந்தரின் அற்புதமான பொன்மொழிகள்

viveganandhar quotes

சுவாமி விவேகானந்தரின் மிக சிறந்த பொன்மொழிகளை இங்கு பதிவிடப்பட்டுள்ளது. இவரின் கொள்கைகள் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவர் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார். அவர் கூறிய பொன்மொழிகள் சிலவற்றை உங்களுக்கு அளிக்கிறோம்.


உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு, உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு...
-விவேகானந்தர்

Vivekanandar quotes in tamil


கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படி இல்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல்.
-விவேகானந்தர்

Vivekanandar quotes in tamil


உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா?...
-விவேகானந்தர்

Vivekanandar quotes in tamil



செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும், இரவிலும் உன் முன் நிறுத்து. அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.
-விவேகானந்தர்

Viveganandar quotes in tamil



வாழ்வும்-சாவும், நன்மையும்-தீமையும், அறிவும்-அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இம்மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் ,நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுப்பிள்ளைத்தனம்.
-விவேகானந்தர்

Viveganandar quotes in tamil




இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
-விவேகானந்தர்

Viveganandar quotes in tamil


பலவீனம் இடையுறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது.
-விவேகானந்தர்
 
Viveganandar quotes in tamil



பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
-விவேகானந்தர்

Viveganandar quotes in tamil



அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான். ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.
                          -விவேகானந்தர்




பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
                            -விவேகானந்தர்





அதிகமாக பேசினால், அமைதியை இழப்பாய்..
ஆணவமாக பேசினால், அன்பை இழப்பாய்..
வேகமாக பேசினால், அர்த்தத்தை இழப்பாய்..
கோபமாக பேசினால், குணத்தை இழப்பாய்..
வெட்டியாக பேசினால், வேலையை இழப்பாய்..
வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பாய்..
பெருமையாக பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்..
-விவேகானந்தர்


தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும். நமக்கு தவறு என்று தெரிந்தால் மட்டுமே!
-விவேகானந்தர்


யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை யோசிக்க வைக்கும்!
-விவேகானந்தர்


உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்த பிரச்சனையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
-விவேகானந்தர்


சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.
-விவேகானந்தர்


மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.
-விவேகானந்தர்

மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.
-விவேகானந்தர்


பசியால் நலிந்து வாடும் ஏழைகளிடம் ஆன்மிகம் பேசுவது அவர்களை அவமதிப்பதாகும்.
-விவேகானந்தர்


மனமும், உடலும் ஒருமித்து இருக்கும்போது எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியே கிடைக்கும்.
-விவேகானந்தர்


ஒருவன் நெருப்பில் கூட தூங்க முடியும். ஆனால், வறுமை நிலையிலோ கணப்பொழுதும் கண்மூடி தூங்க முடியாது.
-விவேகானந்தர்


குறிக்கோளில் செலுத்தும் கவனத்தை போலவே, அதை அடையும் பாதையிலும் கருத்தை செலுத்துங்கள்.
-விவேகானந்தர்


சாந்தமான மனநிலை கொண்டவன் நல்லபணிகளில் ஈடுபட்டு, நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
-விவேகானந்தர்


தன்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலமே உலகில் மிகப்பெரிய பாவம்.
-விவேகானந்தர்


ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒருமுறை லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.
-விவேகானந்தர்


இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் இயலாது என்று எதையும் மறுக்காதீர்கள். எதையும் உங்களால் சாதிக்க முடியும்.
-விவேகானந்தர்


எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.
-விவேகானந்தர்


எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லைவே இல்லை.
-விவேகானந்தர்


தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னை தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
-விவேகானந்தர்


குற்றம் காண்பதை விட குணத்தை காண்பது தான் உயர்ந்த குணம்.
-விவேகானந்தர்


நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.
-விவேகானந்தர்


உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக சேவைதான் செய்ய முடியும்.
-விவேகானந்தர்


அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்.
-விவேகானந்தர்


உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
-விவேகானந்தர்


யார் ஒருவ‌ன் த‌னக்கு உள்ள‌ கெள‌ர‌வ‌மும், ம‌ரியாதையும் போய் விடுமே என்று ப‌ய‌ந்தப‌டி இருக்கிறானோ, அத்த‌கைய‌வ‌ன் அவ‌மான‌த்தைத்தான் அடைகிறான்.
- விவேகான‌ந்த‌ர்


































































Related search
vivekananda quotes in tamil
vivekananda quotes in tamil books pdf
vivekananda quotes in tamil for youth
vivekananda quotes in tamil and english
vivekananda quotes in tamil about education
vivekananda quotes in tamil pdf
vivekanandar quotes in tamil
swami vivekananda quotes in tamil pdf
swami vivekananda quotes in tamil download
swami vivekananda quotes in tamil hd
Post a Comment (0)
Previous Post Next Post